/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் கைவிடப்பட்ட சீரமைப்பு பணி; மரக்கன்று நட்டு காங்., போராட்டம்
/
மேம்பாலத்தில் கைவிடப்பட்ட சீரமைப்பு பணி; மரக்கன்று நட்டு காங்., போராட்டம்
மேம்பாலத்தில் கைவிடப்பட்ட சீரமைப்பு பணி; மரக்கன்று நட்டு காங்., போராட்டம்
மேம்பாலத்தில் கைவிடப்பட்ட சீரமைப்பு பணி; மரக்கன்று நட்டு காங்., போராட்டம்
ADDED : நவ 04, 2024 08:56 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி- பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணி பாதிலேயே கைவிடப்பட்டதால் விபத்துகள் நடக்கிறது. இதை கண்டித்து காங்., மனித உரிமைத்துறையினர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி -- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி --- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, 2019ல் துவங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம், 15ம் தேதி சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முழு அளவில் முடியாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.
இரும்பு சட்ட பராமரிப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காங்., கட்சியின் மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம், மற்றும் கட்சியினர், பொதுமக்களுடன் இணைந்து, மரக்கன்று நட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பஞ்சலிங்கம் கூறுகையில், ''மேம்பாலத்தில் வாகனங்கள் போகும் போது பாலமே அதிர்கிறது. பாலம் கட்டப்பட்டு, 5 - 6 ஆண்டுகளுக்குள் கம்பி பெயர்ந்து விபத்துக்கு அச்சாரம் போடுகிறது. இதை சீரமைக்கும் பணியும் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.
கம்பி பெயர்ந்து மேலே துாக்கிக்கொண்டு நிற்பதால், கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால், மக்களுடன் இணைந்து மறியலில் ஈடுபடுவோம்,'' என்றார்.