/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவம், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் அபிராமி
/
மருத்துவம், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் அபிராமி
மருத்துவம், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் அபிராமி
மருத்துவம், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் அபிராமி
ADDED : ஏப் 07, 2025 05:29 AM
ஸ்ரீ அபிராமி மருத்துவ மனை 300 படுக்கை வசதிகளுடன், கடந்த 32 ஆண்டுகளாக, கோவையில் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இவ்வமைப்பை புகழ்பெற்ற யூராலஜிஸ்ட் டாக்டர் பெரியசாமி தொடங்கினார். மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதே இவ்வமைப்பின் நோக்கம்.
மருத்துவம் மட்டுமல்லாமல் கல்வி துறையிலும் தனது பங்களிப்பை காட்டிய டாக்டர் பெரியசாமி, ஸ்ரீ அபிராமி நிறுவனங்களின் மூலம், ஐந்து பாராமெடிக்கல் கல்லுாரிகளை கோவையில் நிறுவியுள்ளார்.
சமீபத்தில், மருத்துவமனையின் புதிய முன்னேறிய அதிநவீன பரிசோதனை மையத்தை, தொடங்கி வைத்தனர். இந்த மையம் விரைவான, துல்லியமான பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது.
மேலும், பொதுமக்களின் முன்னெச்சரிக்கை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய, மருத்துவமனையில் பல்வேறு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

