/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீட்டு முகாம்; கடன் பிரிவில் 'ஆப்சென்ட்'
/
மருத்துவ காப்பீட்டு முகாம்; கடன் பிரிவில் 'ஆப்சென்ட்'
மருத்துவ காப்பீட்டு முகாம்; கடன் பிரிவில் 'ஆப்சென்ட்'
மருத்துவ காப்பீட்டு முகாம்; கடன் பிரிவில் 'ஆப்சென்ட்'
ADDED : ஜன 12, 2024 11:18 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
இதில், சுற்று பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில், புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெற ஏராளமானோர் விண்ணப்பித்தனர். மற்றும் பழைய காப்பீடு அட்டை தற்போது பயன்படுத்த முடியுமா எனவும் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில், மகளிர் சுய உதவி குழு அமைத்தல் மற்றும் கடன் வழங்குதல் முகாம் நடந்தது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் பகுதி அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் தொழில் செய்ய விரும்புவோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.