UPDATED : அக் 23, 2026 07:59 PM
ADDED : அக் 23, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகர பகுதிகளில் 375 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் ஆகிய இரு இடங்களில் ‘ஏசி’ பஸ் நிறுத்தம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேற்கு மண்டலத்தில், அவினாசிலிங்கம் கல்லூரி அருகே உள்ள பாரதி பார்க் ரோடு மற்றும் மத்திய மண்டலத்தில் திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை அருகே ‘ஏசி’ பஸ் நிறுத்தங்கள் வரவுள்ளன.
‘இந்த பகுதிகளில் தற்போது தினசரி எத்தனை பஸ்கள் இயக்கப்படுகின்றன, மக்களின் தேவை என்ன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, இம்மாத இறுதியில் அரசு ஒப்புதலுக்கு அனுப்புவோம்’ என்று கமிஷனர் ரவி தேஜா கூறினார்.
