/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிறர் தலையீடு இன்றி செயல்படுங்கள்; பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
/
பிறர் தலையீடு இன்றி செயல்படுங்கள்; பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
பிறர் தலையீடு இன்றி செயல்படுங்கள்; பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
பிறர் தலையீடு இன்றி செயல்படுங்கள்; பெண் பிரதிநிதிகளுக்கு அறிவுரை
ADDED : ஜன 22, 2024 11:56 PM

சூலூர்:உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள், யாருடைய தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக முடிவுகளை எடுத்து செயல்படவேண்டும், என, பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
சின்னியம்பாளையம், காடாம்பாடி, அரசூர், காடுவெட்டி பாளையம், கிட்டாம்பாளையம், கலங்கல் உள்ளிட்ட ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பி.டி.ஓ., முத்துராஜூ துவக்கி வைத்தார்.
முதன்மை பயிற்சியாளர்கள் ரவி மற்றும் அனிதா கிறிஸ்டி ஆகியோர் பேசியதாவது:
உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள், அரசின் திட்டங்கள் குறித்து தெளிவாக அறிந்திருக்க வேண்டும். பெண்களுக்கான திட்டங்கள் எவை என்பதை அறிந்து, அவற்றை பெற்று தர முயற்சி எடுத்து, ஊராட்சி மக்களுக்கு உதவ வேண்டும்.
ஊராட்சியில் உள்ள வளங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி சட்ட விதிகளை அறிந்து செயல்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
பிறர் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக, தெளிவான முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.

