தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிரடி... சரவெடி! சம்பளத்துடன் விடுப்பு கொடுங்க!

அதிரடி... சரவெடி! சம்பளத்துடன் விடுப்பு கொடுங்க!

அதிரடி... சரவெடி! சம்பளத்துடன் விடுப்பு கொடுங்க!


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 05:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும், என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனசாக, 8.33 சதவீதம் முதல் 9.33 சதவீதம் வரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் தலைவர் அமீது தலைமையில், நீலகிரி விஜயகுமார் (ஏ.டி.பி.,), சவுந்திரபாண்டியன், வினோத்குமார், நீலகிரி மாடசாமி (எல்.பி.எப்.), கேசவமருகன், வீரமணி(வி.சி.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) உள்ளிட்ட, 13 தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து, தமிழ்நாடு தோட்டஅதிபர் சங்கம் மற்றும் ஆனைமலை தோட்ட அதிபர் சங்க தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அதில், கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 7ம் தேதி மதியம், 12:00 மணி வரை மட்டுமே தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாளில் வருவதால், திங்கள் கிழமை (9ம் தேதி) சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us