/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை
/
பஸ்சை நிறுத்தாமல் 'டாடா' காட்டினால் நடவடிக்கை
ADDED : பிப் 22, 2026 06:40 AM

அன்னுார்: அன்னுார் - சத்தி சாலையில், தாலுகா அலுவலகமும், சிறிது துாரத்தில் நீதிமன்றம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளன. தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் மற்றும் நீதிமன்றம் பஸ் நிறுத்தங்களில் பெரும்பாலான பஸ்கள் நிறுத்துவதில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
நேற்று, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்யகுமார், தாலுகா அலுவலகம் முன் ஆய்வு செய்தார். வழித்தடத்தில் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி, ''தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற பஸ் நிறுத்தங்க ளில் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்; தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்தார்.
அரசு போக்குவரத்து கழக, அன்னுார் கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகி முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

