/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றினால் நடவடிக்கை'
/
'ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றினால் நடவடிக்கை'
ADDED : டிச 04, 2024 10:19 PM
மேட்டுப்பாளையம்; ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட நகர் பகுதியில், 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை, கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து, ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம், சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. இதில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமை வகித்து பேசியதாவது:
ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து இருக்க வேண்டும். மது போதையில் ஆட்டோ ஓட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகப்படியான நபர்களையோ அல்லது பள்ளி குழந்தைகளையோ ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாத இடத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார். கூட்டத்தில் சப்--இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.