/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் 75 ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பு
/
வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் 75 ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பு
வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் 75 ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பு
வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் 75 ஆயிரம் உறுப்பினர் சேர்ப்பு
ADDED : நவ 03, 2024 11:05 PM
அன்னுார்; பா.ஜ., தேர்தல் தொடர்பாக, கோவை வடக்கு மாவட்ட அளவிலான பயிலரங்கம் அன்னுார் அருகே எல்லப்பாளையத்தில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா பேசுகையில், ''சூலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய மூன்று தொகுதிகள் அடங்கிய வடக்கு மாவட்டத்தில், ஒன்றரை லட்சம் உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நவ. 2ம் தேதி வரை 75 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,' என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி பேசுகையில், 'ஒன்றிய பொறுப்பும், அதற்கு மேல் உள்ள பொறுப்புக்கும் வர விரும்புவோர் தீவிர உறுப்பினராக இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும்,' என்றார்.
தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் முரளி பேசுகையில், 'வரும் 15ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கலாம்,'' என்றார்.
பயிலரங்கில், மாவட்ட தேர்தல் இணை பொறுப்பாளர்கள் ஜெயபால், மாரிமுத்து மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.