/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதாபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை
/
மருதாபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை
மருதாபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை
மருதாபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை
ADDED : ஜன 30, 2024 12:27 AM
கோவை:மருதாபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேற்கு மண்டலம், 37வது வார்டுக்கு உட்பட்ட மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் என்பது, நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
இதையடுத்து, மாநகராட்சி பொது நிதியில் இருந்து, ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை, மேயர் கல்பனா பூமி பூஜை செய்து நேற்று துவக்கிவைத்தார்.
தொடர்ந்து, 49வது வார்டுக்கு உட்பட்ட பாலசுந்தரம் சாலையில் உள்ள பிருந்தாவன் பூங்காவில் ஆய்வு செய்த அவர், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கல்விக்குழு தலைவர் மாலதி, சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.