/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைப்பு
/
ரயில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைப்பு
ADDED : அக் 30, 2025 12:13 AM
கோவை: ஆறு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா(22639) தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 1 முதல் 2026 ஏப். 27 வரை கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
ஆலப்புழா - சென்னை சென்ட்ரல்(22640) தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 2 முதல் 2026 ஏப். 28 வரை கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம்(12695) தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 3 முதல் 2026 ஏப். 29 வரை கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படும்.
திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல்(12696) தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 4 முதல் 2026 ஏப்., 30 வரை கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படும். கோவை - ராமேஸ்வரம்(16618) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 4 முதல் 2026 ஏப். 28 வரை கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
ராமேஸ்வரம் - கோவை(16617) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ. 5 முதல் 2026 ஏப். 29 வரை கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும், என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

