/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
/
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு
ADDED : மே 18, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ், கோவை வந்தார்.
கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, போலீசாரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பி.ஆர்.எஸ்., வளாகத்தில் உள்ள, ரைபிள் கிளப் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, ரயில் நிலையம் அருகில் உள்ள, போலீஸ் அருங்காட்சியகத்திற்கு சென்றார்.
ஏற்கனவே கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியுள்ளதால், பி.ஆர்.எஸ்., வளாகத்தை சுற்றிப்பார்த்து, பழைய நினைவுகளை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.