UPDATED : அக் 28, 2026 08:18 PM
ADDED : அக் 28, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசு மருத்துவமனைக்குள், மத்திய சிறை கைதிகள் சிகிச்சை பெற பிரத்யேக வார்டு உள்ளது. 10 படுக்கை வசதி, சிசிடிவி. கேமரா கண்காணிப்புடன், இந்த வார்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு, நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
தேனி சிறையில் சமீபத்தில் கைதிகள் தப்பியோடியதை தொடர்ந்து, தற்போது கோவை கைதிகள் வார்டுக்குள்ளேயும் துப்பாக்கியுடன் இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று கைதிகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷிப்டுக்கு 4 போலீசார் பணியில் உள்ளனர்.
