/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் போலீசில் தெரிவித்தால் கூடுதல் கண்காணிப்பு

ADDED : ஏப் 22, 2025 11:40 PM
மேட்டுப்பாளையம், ; வீடுகளை பூட்டிவிட்டு, நீண்ட நாட்கள் வெளியூர் செல்வோர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். பூட்டிய வீடுகள் கண்காணிக்கப்படும் என மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:-
கோடை விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், வெகு நாட்கள் வீட்டை பூட்டி விட்டு செல்லும் சூழ்நிலையில், வீட்டின் பாதுகாப்பை கருதி, தங்கள் பகுதிக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் அல்லது அப்பகுதி பீட் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பூட்டிய வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதி போலீசாரிடம் லிஸ்ட் கொடுக்கப்படும். தினமும் ரோந்து சென்று வீட்டின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்வார்கள்.
இதுதவிர மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசாரின் இரவு நேர ரோந்தில் அனைத்து பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வீட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைத்திருப்பது அவசியம். அவை மொபைல் போன்களில் பார்க்கக்கூடிய வசதியுடன் இருக்க வேண்டும்.
அப்பார்ட்மெண்ட் போன்றவற்றில் வசிப்போர், அவர்களது செக்யூரிட்டியிடம் தவறாது தகவல் அளிக்க வேண்டும். எத்தனை நாட்கள் வீடு பூட்டி இருக்கும், எங்கு செல்கிறோம் என சொல்லிவிட்டு செல்வது நல்லது.
இவ்வாறு அவர்கூறினார்.---