sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சியில் இருந்தோ, வழித்தடத்திலோ... கூடுதல் ரயில்!: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை

/

பொள்ளாச்சியில் இருந்தோ, வழித்தடத்திலோ... கூடுதல் ரயில்!: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை

பொள்ளாச்சியில் இருந்தோ, வழித்தடத்திலோ... கூடுதல் ரயில்!: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை

பொள்ளாச்சியில் இருந்தோ, வழித்தடத்திலோ... கூடுதல் ரயில்!: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை


ADDED : ஜன 15, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், புதிய ரயில்களை இயக்க வேண்டும் என, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், வாகன நிறுத்தப்பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

முகப்பு பகுதியில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு அங்கு பூங்கா, அழகிய மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. தேசியக்கொடி கம்பம் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பயணியர் காத்திருப்பு பகுதியில், கட்டண 'ஏசி' அறையும் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டேஷனின் முகப்பு பகுதியில் இருந்த விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆர்ச் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார். பாலக்காடு மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

கோரிக்கை மனு பாலக்காடு கோட்ட ரயில்வே பயனாளர்கள் குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில், பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு, கோவில்பாளையம் ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

தெற்கு ரயில்வே பயனாளர் குழு முன்னாள் உறுப்பினர் ஜோதிமணி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பெங்களூரு ரயில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:

கோவை அல்லது பொள்ளாச்சியில் இருந்து பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு தினமும் புதிய ரயில் இயக்க வேண்டும். கோவை - பெங்களூரு உதய் டபுள் டெக்கர் ரயில், பொள்ளாச்சி வரை அல்லது வழியாக நீட்டிக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணிகள் ரயிலை, 'ஆனைமலை ரோடு' நிறுத்தத்துடன் பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.

கோவை அல்லது ஈரோடு - ராமேஸ்வரம் தினசரி ரயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்க வேண்டும். பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் இரவு நேர ரயில், பொள்ளாச்சியில் இருந்து இரவு, 8:15 மணிக்கு கிளம்பி, கோவைக்கு இரவு, 9:15 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும். அது போன்று, காலையில் இயக்கப்படும் மதுரை - கோவை ரயில், 11:30 மணிக்கு கோவை செல்லும்படி இயக்க வேண்டும்.

கோவில்பாளையம் ரயில்நிலையம் அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும். ஆனைமலைரோடு ரயில்நிலையத்தில், சென்னை - பாலக்காடு ரயில் நின்று செல்ல வேண்டும்.

பை-பாஸ் தடம் மதுரை - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், மாசாணி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆனைமலை ரோடு ரயில் நிறுத்தத்துடன் புதிய பயணியர் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.

பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், 'பை - பாஸ்' ரயில்வே தடம் (பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு) அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து தென்னை நாரை துறைமுகங்களுக்கு எளிதில் அனுப்ப, 'இன்லேன்ட் கன்டெய்னர் டிபோட்' அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக பொது மேலாளர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு, கூறினர்.

10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி ரயில் நிலையம் மேம்படுத்துவதற்காக, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் நிலையத்தில் முகப்பு கட்டடம், லிப்ட் வசதி, பயணிகளுக்கான ஏசி காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்வு தளம், பார்க்கிங் வசதிகள் செய்யப்படுகிறது. நாகர் கோவில் - நியூஜல்பைகுரி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும். மேலும், புதிய ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us