/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 விக்கெட் வீழ்த்தி ஆதித்யா அபாரம்
/
5 விக்கெட் வீழ்த்தி ஆதித்யா அபாரம்
ADDED : செப் 26, 2025 05:32 AM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டிகள், சி.ஐ.டி., - பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. சி.ஐ.டி., கிரிக்கெட் கிளப் அணியும், ஏ.எஸ்.பி., என்டர்பிரைசஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, சி.ஐ.டி., கிரிக்கெட் கிளப் அணியினர், 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 198 ரன் எடுத்தனர். வீரர் அஜய், 58, ஆதித்யா, 43 ரன், சஞ்சீவ், 31 ரன் எடுத்தனர். மழை காரணமாக, 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, களம் இறங்கிய ஏ.எஸ்.பி., அணியினர், 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 105 ரன் எடுத்தனர். வீரர் தனஜெய், 37 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ஆதித்யா ஐந்து விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.