ADDED : பிப் 18, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில், உள்ள ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 30வது ஆண்டாக மகா சிவராத்திரி விழா வருகிற மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நான்கு ரதங்கள் ஜன.,5ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வலம் வருகின்றன. இதில் ஒரு ரதம், அன்னூருக்கு இன்று வருகிறது. 9:00 மணி வரை, குமாரபாளையத்தில் தரிசனம் நடக்கிறது. இதன்பிறகு கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன் புதூர் செல்கிறது. இரவு சொக்கம்பாளையத்தில் முடிவடைகிறது.
நாளை (19ம் தேதி) காலை 7:00 முதல் 3 மணி நேரம், மன்னீஸ்வரர் கோவில் முன் ரத தரிசனம் நடைபெறுகிறது.