/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதியோகி ரதம் அன்னூர் வருகை :பக்தர்கள் வழிபாடு
/
ஆதியோகி ரதம் அன்னூர் வருகை :பக்தர்கள் வழிபாடு
ADDED : பிப் 18, 2024 10:45 PM

அன்னுார்;ஆதியோகி வீற்றிருக்கும் ரதம் அன்னுாருக்கு நேற்று வந்தது.
கோவை, வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில், ஈஷா யோக மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், மகா சிவராத்திரி விழா இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பல லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
மகா சிவராத்திரி குறித்து, பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த ஜன. 5ம் தேதி நான்கு ரதங்கள், கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டன.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு ரதம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக நேற்று அன்னுார் வந்தது. அன்னுாரில் கோவை சாலையில், தன்னார்வலர்கள், பக்தர்கள் பூ தூவி, ஆதியோகி ரதத்தை வரவேற்றனர். சிறப்பு வழிபாடு நடந்தது, மகா சிவராத்திரியன்று, தியானிப்பதாலும், வழிபாடு செய்வதாலும், கிடைக்கும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை, தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
தியானம், யோகா ஆகியவற்றை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தன்னார்வலர்கள் கூறுகையில்,' 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் அன்னுார் வட்டாரத்தில் ஆதி யோகி ரத யாத்திரை நடக்கிறது.
இதையடுத்து சூலூர் ஒன்றியம் வழியாக, கோவை மாநகருக்கு ரதம் செல்கிறது. வருகிற மார்ச் 7ம் தேதி ரதம் ஈஷா யோக மையத்தை அடையஉள்ளது.
மகா சிவராத்திரி விழா நேரலையாகவும் ஒளிபரப்பாக உள்ளது. ஈஷா யோக மையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

