ADDED : ஜன 02, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதற்காக அங்குள்ள மைதானத்தில், கேளிக்கை சாதனங்கள் மற்றும் கடைகள் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏலம் விடப்படும். நேற்று நடந்த ஏலத்தில், போதியளவு ஏலதாரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஏலம் குறித்து முறையான தகவல் தெரிவிக்காதது மற்றும் சிண்டிகேட் காரணமாக, ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.