/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., ஆண்டு விழா கூட்டம்
/
அ.தி.மு.க., ஆண்டு விழா கூட்டம்
ADDED : நவ 11, 2024 04:17 AM
கோவை : அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு தொடக்க விழாவை, கடந்த அக்.,17ம் தேதி முதல் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக, வெள்ளலூர் பேரூராட்சியில் அ.தி.மு.க., 53வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றுப் பேசுகையில், “அ.தி.மு.க.,வில் இருப்பதே பெருமை. அனைவரையும் முன்னேற்றும் கட்சி நமது. வரும் 2026ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் அமரும். இ.பி.எஸ்., முதல்வராவார். கட்சியினர் அதை நோக்கி உழைக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.