/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமரை முடிவு செய்யும் சக்தியாக அ.தி.மு.க.,
/
பிரதமரை முடிவு செய்யும் சக்தியாக அ.தி.மு.க.,
ADDED : பிப் 26, 2024 02:24 AM

தேர்தலில் அ.தி.மு.க., யாருடன் கூட்டணி என பலரும் கேட்கின்றனர். மக்களுடன் மட்டுமே அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும். இப்படித்தான், தொடர்ந்து கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில், 2.25 கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட மூன்றாவது பெரிய கட்சி அ.தி.மு.க., கடந்த தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, தி.மு.க., வென்றது. இருப்பினும், அ.தி.மு.க., அதிக தொகுதியில் வென்றதோடு, அதிக ஓட்டுகளையும் பெற்றது. நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் சக்தியாக அ.தி.மு.க., இந்த தேர்தலில் மாறும். அதன்பின், அ.தி.மு.க., தலைமையை உலகமே திரும்பி பார்க்கும். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்ட, அப்போதைய முதல்வர் பழனிசாமி முடிவு செய்திருந்தார். அவர் அளித்த திட்டங்களுக்கு, இன்று
கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நிச்சயம் தேர்தலின் போது எதிரொலிக்கும்.
ஜெயராமன்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

