/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூழல் மசோதாவை ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
சூழல் மசோதாவை ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
சூழல் மசோதாவை ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
சூழல் மசோதாவை ரத்து செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஜன 21, 2025 10:15 PM
வால்பாறை, ; வால்பாறை அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் சுடர்பாலு, நகர வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் பொன்கணேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில்,சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வால்பாறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சூழல் நுண் உணர்வு மசோதாவை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதி ரோடுகளை தொழிலாளர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், தெருவிளக்கு பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.