/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பேராசிரியர்கள் அறிவுரை
/
வேளாண் பேராசிரியர்கள் அறிவுரை
ADDED : ஜன 02, 2026 05:16 AM
அன்னூர்: டி.என்.பாளையம் ஜே.கே.கே. முனி ராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியர் அன்னூர் வட்டாரத்தில் தங்கி வேளாண்மை அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கஞ்சப்பள்ளியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில், ஊரக வேளாண்மை பயிற்சி துவக்க விழா நடந்தது. சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியர்கள் சுமதி, கவுதமி கார்த்திகேயன் ஆகியோர் பேசுகையில், 'சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் வாயிலாக அதிக அளவு நீர் சேமிக்கலாம். மண் பரிசோதனை செய்து அதன் பின் மண்ணுக்கேற்ற பயிர் செய்ய வேண்டும்,' என்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
ஜே.கே.கே. முனி ராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவியர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

