ADDED : ஜன 02, 2026 05:16 AM
பெ.நா.பாளையம்: செல்வபுரத்தில் உள்ள தன்னாசி ஈசர் திருக்கோயிலில், 53வது குருபூஜை, ஆருத்ரா அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் நடக்கின்றன.
கடந்த, 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், தன்னாசி ஈசர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் மாலை, தன்னாசி ஈசர் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இன்று வெள்ளிக்கிழமை மாலை, 3:00 மணிக்கு குகை பூஜையும், இரவு, 7:00 மணிக்கு தன்னாசி ஈசர் பாதக்குறடு பூஜை மற்றும் பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு அன்னதானம், தொடர்ந்து யாக பூஜைகள் நடக்கின்றன.
சனிக்கிழமை நள்ளிரவு, 12:15 மணிக்கு ஆருத்ரா அபிஷேகம், தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், 7:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு தன்னாசி ஈசர் குதிரை வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திங்கட்கிழமை காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் தொடர்ந்து கொடி இறக்கம் நடக்கிறது.

