/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் பழுது நீக்கும் பணியில் 'அலர்ட்' ஆக இருக்க அறிவுரை
/
மின் பழுது நீக்கும் பணியில் 'அலர்ட்' ஆக இருக்க அறிவுரை
மின் பழுது நீக்கும் பணியில் 'அலர்ட்' ஆக இருக்க அறிவுரை
மின் பழுது நீக்கும் பணியில் 'அலர்ட்' ஆக இருக்க அறிவுரை
ADDED : ஜூன் 29, 2025 11:10 PM
பொள்ளாச்சி; மழையின் போது, மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், கவனமுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த சில தினங்களாக, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது, காற்றுடன் மழை பெய்வதால், மின் வினியோகத்தில் தடங்கல் ஏற்படுகிறது.
மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படுகிறது. அதனை சீரமைக்கும்போது ஒயர்மேன்கள், போர்மேன்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும், என, உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மழை காலத்தில், மின் பழுது நீக்க, மின்கம்பங்களில் ஏறும் மின்வாரிய ஊழியர்கள், மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. அதனால், மின்வாரிய பணியாளர்கள், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் பழுது நீக்க முயற்சிக்கும் போது, சம்பந்தப்பட்ட துணை மின்நிலையத்தில் உள்ள ஆபரேட்டர்களிடம் தெளிவாக பேச வேண்டும்.
மின்விநியோகம் நிறுத்தியதை உறுதி செய்த பிறகே, அந்தந்த கம்பங்களில் ஏறி, பழுது நீக்க வேண்டும். இரவு நேரங்களில் உரிய உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின்றி பழுது நீக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. எர்த்ராடு, பெல்ட் ரோப், சேப்டி பெல்ட், கையுறைகள் உள்ளிட்டவைகளை முறையாக பயன்படுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு, கூறினர்.