/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் பணியை துவங்க பா.ஜ.,வினருக்கு அறிவுரை
/
தேர்தல் பணியை துவங்க பா.ஜ.,வினருக்கு அறிவுரை
ADDED : ஏப் 21, 2025 09:31 PM

வால்பாறை,; வால்பாறை பா.ஜ., மண்டல் புதிய தலைவராக செந்தில்முருகன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய மண்டல் தலைவர் அறிமுக விழா, தனியார் கலையரங்கில் நடந்தது. முன்னாள் மண்டல் தலைவர் பாலாஜி வரவேற்றார்.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, புதிய மண்டல் தலைவரை அறிமுகம் செய்து பேசுகையில், ''கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை இப்போதே துவங்கி விடுங்கள். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி, ஓட்டு சேகரிக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன், மாநில அமைப்பு தேர்தல் பார்வையாளர் ஜான்சன், வால்பாறை மண்டல பார்வையாளர் தங்கவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனகவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.