/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை
/
குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுரை
ADDED : பிப் 03, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : பவானி ஆற்று கதவணையில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்த சமயபுரத்தில், பவானி ஆற்றுத் தண்ணீரில் மின்சாரம் உற்பத்தி செய்யும், கதவணை செயல்படுகிறது.
இந்த கதவணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் கலங்கிய நிலையில் வர உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்கவும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.