/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையை தரம் பிரித்து தர மாணவர்களுக்கு அறிவுரை
/
குப்பையை தரம் பிரித்து தர மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : டிச 03, 2025 07:33 AM

அன்னுார்: 'குப்பையை தரம் பிரிப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்,' என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தூய்மை பாரதம் திட்டத்தில், மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி அன்னுார் வட்டாரத்தில் நடந்தது. நேற்று முன்தினம் 46 பள்ளிகளிலும், நேற்று 36 பள்ளிகளிலும், என, 82 பள்ளிகளில், 5,770 மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆணையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பார்க் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மாணவர்கள் சிலரை அழைத்து குப்பையை தரம் பிரிக்கும்படி செய்தனர். பின்னர் அலுவலர்கள் பேசுகையில், ' மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் குப்பையை மக்குவது, மக்காதது என பிரித்து தூய்மை காவலரிடம் வழங்க வேண்டும் என கூற வேண்டும்,' என்றனர்.
தலைமை ஆசிரியர் சரவணதேவி தலைமை வகித்தார். பள்ளிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அப்துல் வஹாப், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, யமுனாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

