/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே வேலைகள் முடிந்த பின்பு பாதாள சாக்கடை பணிகள் வேகம்
/
ரயில்வே வேலைகள் முடிந்த பின்பு பாதாள சாக்கடை பணிகள் வேகம்
ரயில்வே வேலைகள் முடிந்த பின்பு பாதாள சாக்கடை பணிகள் வேகம்
ரயில்வே வேலைகள் முடிந்த பின்பு பாதாள சாக்கடை பணிகள் வேகம்
ADDED : ஜன 27, 2024 12:13 AM
கோவை: ரயில்வே 'கிராசிங்' பணிகள் முடிந்த பின்பு, குறிச்சி-குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 87 முதல் 100வது வார்டு வரையிலான, 14 வார்டு மக்கள் பயன்பெறும் விதமாக குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதிகளில், ரூ.591.14 கோடி மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட இப்பணிகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்தும் இன்னும் தாமதமாகி வருகிறது.
குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள், தற்போது நடந்துவரும் நிலையில், போத்தனுார் பகுதியில் ரயில்வே பணிகள் காரணமாக, தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி ரோடு, சிட்கோ, குனியமுத்துார், ஜே.ஜே. நகர் பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை வேகப்படுத்துமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
குறிச்சி குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டத்தில், 42 ஆயிரம் இணைப்புகள் குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில், 7,500 தவிர மற்ற இணைப்புகள் இப்போதைக்கு வழங்க முடியாது. காரணம், இப்பகுதிகளில் ரயில்வே 'கிராசிங்' பணிகள் முடிய வேண்டியுள்ளது.
ரயில்வே நிர்வாகத்திடம் இப்பணிகளை மூன்று மாதங்களில் முடித்து தருமாறு கேட்டுள்ளோம். இதுவரை, 3,700 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ரயில்வே பணிகள் முடிந்தவுடன், வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

