/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கராத்தே போட்டியில் ஆக்ரோஷம் பார்வையாளர்கள் கரகோஷம்
/
கராத்தே போட்டியில் ஆக்ரோஷம் பார்வையாளர்கள் கரகோஷம்
கராத்தே போட்டியில் ஆக்ரோஷம் பார்வையாளர்கள் கரகோஷம்
கராத்தே போட்டியில் ஆக்ரோஷம் பார்வையாளர்கள் கரகோஷம்
ADDED : நவ 11, 2024 05:13 AM

கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
'ஜென் கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா' மற்றும் பி.எஸ்.ஜி., தற்காப்பு கலை சங்கம் சார்பில், சுக்கி சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில், இரு நாட்கள் நடந்தது.
இதில், 14, 15, 16, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும், 18 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் வீரர், வீராங்கனைகள், 550 பேர் பங்கேற்றனர். போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இரு பிரிவினரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.
பார்வையாளர்களும் கரகோஷங்கள் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். 'சாம்பியன் ஆப் சாம்பியன்' உள்ளிட்ட பரிசுகள் ஒவ்வொரு பிரிவிலும் தலா எட்டு பேருக்கு வழங்கப்பட்டன.
ஜென் கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் தர்சன் தயானந்த், இந்தோனேசியா பயிற்சியாளர் சென்சி ரிக்கி பர்னாபஸ் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.