/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் 'வேளாண் திருவிழா 2025' நிறைவு
/
சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் 'வேளாண் திருவிழா 2025' நிறைவு
சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் 'வேளாண் திருவிழா 2025' நிறைவு
சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் 'வேளாண் திருவிழா 2025' நிறைவு
ADDED : ஜன 06, 2025 02:07 AM

கோவை ;கோவை சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த, வேளாண் திருவிழா 2025ல், ரேக்ளா பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, செங்கண்டி புதுார் அகிலேஷ், மற்றும் உடைய குளம் செல்வராஜ் ஆகியோர் வென்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, நடந்த இப்போட்டியில் பல்வேறு கால்நடைகள், அவற்றுக்கான போட்டிகள் நடந்தன.
காங்கேயம் மாடுகள், காளைகள், சண்டை சேவல் கண்காட்சி, குதிரை பந்தயம், ரேக்ளா பந்தயம் போன்றவை நடந்தன. வேளாண் கருவிகள், பயன்பாட்டு பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றன.
20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை 46 ஆயிரம் பேர் கண்டு மகிழ்ந்தனர்.
வள்ளிக்கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் இடம் பெற்றன.
இறுதி நாளான நேற்று நடந்த ரேக்ளா பந்தயத்தில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, செங்கண்டி புதுார் அகிலேஷ், மற்றும் உடைய குளம் செல்வராஜ் ஆகியோர் வென்றனர்.