/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் விளைபொருள் நாளை ஏல விற்பனை
/
வேளாண் விளைபொருள் நாளை ஏல விற்பனை
ADDED : மே 26, 2025 11:12 PM
அன்னுார்,; அன்னுாரில் வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நாளை நடக்கிறது.
அன்னுார்-சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நாளை (28ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. விவசாயிகள், பருத்தி, தேங்காய், வாழை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வரலாம் எந்த இடைத்தரகு கமிஷனும் தரத் தேவையில்லை.
போதிய விலை கிடைக்க விட்டால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கலாம் இருப்பு வைக்கப்படும் பொருட்களுக்கு ஈடாக குறைந்த வட்டியில் கடன் பெறலாம் தேசிய அளவில் மற்ற சந்தைகளில் விலை பொருட்களுக்கு கிடைக்கும் விலையையும் தெரிந்து கொள்ளலாம். உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.