/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு
/
சோளம் விதைக்கு மானியம்; வேளாண் துறை அழைப்பு
ADDED : பிப் 04, 2025 11:53 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானிய விலையில் விதைப்பு சோளம் பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில், சோளம் சாகுபடியை பெருக்கும் வகையில், விதை கிராம திட்டம் மற்றும் தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (சிறுதானியம்) வாயிலாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் சோளம் வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ சோளம் விலை, 77 ரூபாய். இதில், 30 ரூபாய் மானியம் போக, 47 ரூபாய் செலுத்தி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 30 கிலோ வரை சோளம் வழங்கப்படுகிறது.
வேளாண் அலுவலகத்தில், கே - 12 ரக சோளம், 2 டன் அளவு இருப்பு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கே - 12 ரக சோளம் விதை தீவனத்திற்கும், தானியத்திற்கும் சிறந்த ரகமாகும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சோளம் விதையை பெற்று பயனடையலாம்,' என்றனர்.