/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப அ.தி.மு.க.,-- பா.ஜ., பூத் கமிட்டி முடிவு

ADDED : டிச 29, 2025 05:24 AM
சூலூர்: சூலூர் பேரூராட்சி அ.தி.மு.க.,- பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சூலூரில் நடந்தது.
எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் அச்சப்படுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என, துணை முதல்வர் உதயநிதி கூறினார். ஐந்து வருடம் முடிய போகிறது .ஆனால், அந்த ரகசியம் எதுவென கூறவில்லை.
உண்மைக்கு மாறாக பேசிவரும், மக்கள் விரோத தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தேர்தல் வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார். தேர்தல் பணிகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டன. அ.தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகை வேலன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், கண்ணம்பாளையம் பேரூராட்சியில், எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க., நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.