/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க.,- -தி.மு.க., மோதல்; 17 பேர் மீது போலீசார் வழக்கு
/
அ.தி.மு.க.,- -தி.மு.க., மோதல்; 17 பேர் மீது போலீசார் வழக்கு
அ.தி.மு.க.,- -தி.மு.க., மோதல்; 17 பேர் மீது போலீசார் வழக்கு
அ.தி.மு.க.,- -தி.மு.க., மோதல்; 17 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : மார் 31, 2025 10:16 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரு தரப்பிலும், 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ், 47, அளித்த புகாரில் கஸ்தூரி பாளையம் குணசேகரன், பருவவர்த்தினி, பாபு ஆகியோர் மீதும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரகுநாதன், 62, அளித்த புகாரில், ஹரிபிரகாஷ், உதயகுமார், மகேஷ் உள்ளிட்ட நால்வர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தவிர, கஸ்தூரி பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் உதயகுமார், 39, அளித்த புகாரில் சசிகுமார், தீரஜ் ராமகிருஷ்ணன், சாஸ்வத், கார்த்திக், சரவணன் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும், பெரியநாயக்கன்பாளையம் குணசேகரன், 55, அளித்த புகாரில் விஷ்வபிரகாஷ், சிவராஜ், அசோக்குமார், ஜனார்த்தனன், பாபு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குகள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் எதிரொலியாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அதிரடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.