/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நிரம்பி வழியும் அக்காமலை, சோலையாறு
/
மழையால் நிரம்பி வழியும் அக்காமலை, சோலையாறு
ADDED : ஆக 05, 2025 11:35 PM

வால்பாறை; பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அக்காமலை தடுப்பணை இரண்டு மாதமாக நிரம்பி வழிகிறது.
வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில், தென்மேற்குப்பருவ மழை துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில், வால்பாறை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பியது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக செக்டேம் நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல் பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றானசோலையாறு அணை கடந்த ஜூன் மாதம் 26 ம் தேதி முதன் முறையாக நிரம்பியது. இந்த ஆண்டில் இது வரை இந்த அணை ஐந்து முறை நிரம்பியுள்ளது.
வால்பாறையில் மீண்டும் பருவ மழை பெய்து வருவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.76அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,886 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,913 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில் 28 மி.மீ., மழை பெய்துள்ளது.