/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழையால் பசுமையான அக்காமலை 'கிராஸ் ஹில்ஸ்'
/
பருவமழையால் பசுமையான அக்காமலை 'கிராஸ் ஹில்ஸ்'
ADDED : ஜூன் 04, 2025 08:45 PM

வால்பாறை; பருவமழையின் கருணையால், வால்பாறை அடுத்துள்ள அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பசுமைக்கு திரும்பியதால், வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கியது. கடந்த வாரம் தீவிரமாக பெய்த கனமழையினால், வால்பாறையில் உள்ள பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வறட்சியாக காட்சியளித்த, வனப்பகுதி தற்போது பெய்யும் பருவமழையால் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் வனத்துறையினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பசுமையாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை 101.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 911 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 889 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 14, பரம்பிக்குளம் - 10, ஆழியாறு - 5.2, வால்பாறை - 17, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 15, என்ற அளவில் மழை பெய்தது.