/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதித்துறை மீதான தாக்குதல் கண்டித்து அகில பாரத வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
நீதித்துறை மீதான தாக்குதல் கண்டித்து அகில பாரத வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீதித்துறை மீதான தாக்குதல் கண்டித்து அகில பாரத வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீதித்துறை மீதான தாக்குதல் கண்டித்து அகில பாரத வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 31, 2025 10:03 PM

கோவை; நீதித்துறை மீதான தாக்ககுதல் கண்டித்து, அகில பாரத வக்கீல் சங்கம் சார்பில், கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், மதுரை, ஐகோர்ட்டு கிளை நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்புகளை விமர்சித்து பேசி வந்துள்ளார்.
மேலும், நீதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் எழுதினார். இதனால் வக்கீல் வஞ்சிநாதன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.
அவமதிப்பு வழக்கை கைவிடக்கோரி, தமிழ்நாடு முழுவதும் வக்கீல் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நீதித்துறைக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுவோரை கண்டித்து, அகில பாரத வக்கீல்கள் சங்கம் சார்பில், கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில், பல்வேறு ஹிந்து அமைப்புகளை சார்ந்த வக்கீல்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் சீனியர் வக்கீல் ரங்கராஜூ பேசியதாவது:
நீதித்துறையில் நேர்மையாக செயல்படும் நீதிபதிகளை விமர்சித்து தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. வக்கீல் வாஞ்சிநாதன், ஐகோர்ட் நீதிபதி தீர்ப்புகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் எழுதியதால் நீதிமன்ற அவமதிப்பு தொடுக்கப்பட்டதாக கூறுவது தவறானது. இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்ற மாண்பு சீர் குலைந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.