/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து வித கடன்களும்...குறைந்த வட்டியில்
/
அனைத்து வித கடன்களும்...குறைந்த வட்டியில்
ADDED : செப் 30, 2025 10:37 PM
பா ங்க் ஆப் பரோடா நாடு முழுவதும் சுமார் 8,300க்கும் மேலான கிளைகளுடன் இயங்கிவருகிறது. இது ஒரு இந்திய அரசு நிறுவனமாகும்.தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூருக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் வகையில், வங்கியின் கோவை பிராந்தியம் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.
பெரு நிறுவனங்களுக்கு துரித சேவை வழங்கிட வங்கியின் மிட் கார்பொரேட் கிளை, கோவை பிராந்திய அலுவலகத்திலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கடன்கள் வழங்கிட கணபதி, ராம்நகர், கோவை மெயின் மற்றும் திருப்பூர் காட்டன் மார்க்கெட் கிளைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பாங்க் ஆப் பரோடா கிளைகளில், அனைத்து வகையான தொழில் கடன் வசதி, தங்க நகைக்கடன், வீட்டுக்கடன் வசதி, வாகனக்கடன் வசதி, டிஜிட்டல் கடன் வசதி என அனைத்து வசதிகளும் மிக குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளன.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் பாங்க் ஆப் பரோடாவின் அனைத்து கிளைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1908ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாங்க் ஆப் பரோடா வங்கி, இந்த ஆண்டில் 11 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அதனை கொண்டாடும் விதமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களும், சிறப்பு சலுகைகளும் வங்கியின் அனைத்துகிளைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன.