ADDED : ஜூலை 21, 2026 02:26 AM

அ நிறம் | அளவு
கோவை: என்.ஜி.ஜி.ஓ.,காலனி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1989--1990ல் எஸ்.எஸ்.எல்.சி.,1990--1992-ல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அப்பள்ளி மாணவர் பயன்பாட்டுக்கு டெஸ்க், பெஞ்ச் மற்றும் இருக்கைகளை வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம், தலைமை ஆசிரியர் ஸ்ரீ தேவி ஆகியோர் பங்கேற்றனர். பல அரசுத்துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவரும், வக்கீலுமான ராஜேஷ் கூறுகையில், ''அசோகபுரம் பள்ளி முன்மாதிரி பள்ளி. உயர்ந்த கல்வி கிடைக்கி றது.
பள்ளிக்கான தேவைகளை முன்னாள் மாணவர்களான நாங்கள் பூர்த்தி செய்ய காத்திருக்கிறோம்,'' என்றார்.
