ADDED : டிச 31, 2024 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியில், 1985ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சாமநாயக்கன்பாளையத்தில் 'நட்பின் சங்கமம்' என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ராதாமணி வரவேற்றார். அமர்நாத் நட்பின் சங்கமம் குறித்து அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் சக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு துறையின் முன்னாள் சார் பதிவாளர் கணபதி சுப்பிரமணியம், காவல்துறை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் காணொளி வாயிலாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.