ADDED : மார் 31, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வட்டமலைப்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில், 2010ம் ஆண்டு முதல் -2013ம் ஆண்டு வரை, பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
பல துறைகளில், சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்த, முன்னாள் மாணவரும் விரிவுரையாளருமான, தமிழ் மணிகண்டனுக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

