ADDED : ஆக 10, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்,; கோவை ஒத்தக்கால்மண்டபம் அடுத்து பிரீமியர் மில்ஸ் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
நேற்று இங்கு, 1994ல் பிளஸ் 2 முடித்து வெளியேறிய அறிவியல், வணிகவியல் பிரிவு மாணவர்கள் மீண்டும் சந்தித்தனர்.
மூன்றாம் ஆண்டாக இம்முறை, 22 பெண்கள் உள்பட, 44 பேர் பள்ளி வளாகத்தில்சந்தித்து ஓராண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
குழு புகைப்படம் எடுத்தனர். பள்ளியில் மண்டல அளவில் நடக்கும் போட்டிகளுக்காக, 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினர்.
மதியம் சைவ, அசைவ விருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிற மாவட்டங்கள். மாநிலங்களில் வசிப்போரும் பங்கேற்றனர்.