/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் பங்கு அவசியம்'
/
'பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் பங்கு அவசியம்'
'பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் பங்கு அவசியம்'
'பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் பங்கு அவசியம்'
ADDED : நவ 27, 2025 02:36 AM
கோவை: டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், 1975-76 கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலர் ரவிச்சந்திரன் புத்தகத்தை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் 80க்கும் மேற்பட்டோரின் பங்களிப்பில், பள்ளிக்கு தேவையான நூல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின், தனிமனித வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளதை நினைவுகூர்ந்த முன்னாள் மாணவர்கள், 'பள்ளி வளர்ச்சிக்கும், அங்கு கல்வி பெற்ற மாணவர்களின் பங்களிப்பும் அவசியமானது' என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியை ராதாமணி, உதவி தலைமையாசிரியர் குமார், ஆசிரியர் அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.