ADDED : ஏப் 15, 2025 11:19 PM

பொள்ளாச்சி அ.தி.மு.க., சார்பில், அம்பேத்கரின், 135வது பிறந்தநாள் விழா தேர்நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா நிர்வாகிகள் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணைச் செயலாளர் ஆறுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்தில், நுாலக வாசகர் வட்டம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் விழா நடந்தது.
ஓய்வு பெற்ற நுாலகர் கணேசன் வரவேற்றார். நுாலகர் வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க செயலாளர் நாயப்சுபேதார் நடராஜ், அம்பேத்கர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நுாலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி முன்னாள், ராணுவ வீரர் நல சங்க பொருளாளர்கள் சிவக்குமார், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.
நுாலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்து, அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் குறித்து பேசினார். மாணவர்களுக்கு அம்பேத்கர் குறித்த வினாக்கள் கேட்கப்பட்டு, விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- நிருபர் குழு -

