ADDED : ஏப் 16, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில், தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்து, அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து பேசினார்.
மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை தலைவர் மகேஸ்வரன் பேசினர். நகர இணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். இதில், அம்பேத்கர் வரலாறு பற்றி பேசினர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
