/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார், பைக் மீது ஆம்புலன்ஸ் மோதல்
/
கார், பைக் மீது ஆம்புலன்ஸ் மோதல்
ADDED : மே 26, 2025 05:30 AM
கோவை; கார், பைக் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை ஒண்டிப்புதுார் பகுதியில், நேற்று காலை 9:00 மணிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்சை, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்த மணிகண்டன், 27 என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, அவ்வழியாக சென்ற கார் மற்றும் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற கோவை சிங்காநல்லுார், ராஜன், 57, அவரது உறவினர் பாலக்காடு, பல்லசேனாவை சேர்ந்த சுரேஷ்குமார், 59 ஆகியோர் காயமடைந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.