/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாமதமாக திறக்கும் அங்கன்வாடி மையம்
/
தாமதமாக திறக்கும் அங்கன்வாடி மையம்
ADDED : பிப் 05, 2025 11:36 PM
கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், ஏழு ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) செயல்பட்டு வருகிறது. இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இங்கு சத்துணவு சாப்பிட்டு கல்வி பயின்று வருகின்றன.
அத்திப்பாளையத்தில் உள்ள மையத்தில் 30 குழந்தைகள் உள்ளன. இந்த மையம் மிகத் தாமதமாக திறக்கப்படுகிறது என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'மையம் சரியான நேரத்தில் திறந்து இருந்தால், குழந்தைகளை மையத்தில் விட்டு விட்டு வேலைக்கு செல்லலாம் என, குழந்தைகளுடன் வந்து இங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பல நாட்கள் காலை 10:00 மணிக்கு தான் மையம் திறக்கப்படுகிறது. காலை 8:30 மணியிலிருந்து குழந்தைகள் காத்திருக்கின்றன. சரியான நேரத்தில் மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.