UPDATED : நவ 09, 2026 06:15 PM
ADDED : நவ 09, 2026 03:58 PM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி முதல் வார்டு ராமசாமி நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது.
மையத்தின் ஒரு பக்கம் ஊமப்பாளையம், பாலப்பட்டி ரோடும், மற்றொரு பக்கம் கோத்தகிரி மெயின் ரோடும் உள்ளன. இரு ரோடுகளிலும் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அங்கன்வாடி மையத்தை சுற்றி போதிய இடவசதி உள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.
