/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
/
அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
UPDATED : ஏப் 10, 2025 11:06 PM
ADDED : ஏப் 10, 2025 10:19 PM

மடத்துக்குளம்; மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி சின்னப்பன்புதுாரில், அங்கன்வாடி மைய கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில், பத்துக்கும் அதிகமாக குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
அங்கன்வாடி மையம் ஊராட்சியின் பிரதான ரோட்டின் அருகில் உள்ளது. மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால், குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்படுகிறது. குழந்தைகள் வெளியில் வந்தாலும் விபத்துக்குள்ளாகும் சூழல் இருப்பதால், மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க, சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.